பொங்கல் விழா என்றாலே சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு களை கட்டத் துவங்கி விடும். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரிலிருந்து 6 கி.மீ.,தொலைவில் காரைக்குடி ரோட்டின் அருகாமையிலுள்ள மைதானத்தில் தான் சிராவயல் மஞ்சுவிரட்டு தொழு அமைக்கப்பட்டுள்ளது.பொங்கலை அடுத்து தை3ம் தேதியன்று 6 தலைமுறைகளுக்கும் மேலாக மூன்று நுாற்றாண்டுகளுக்கும் மேலாகஇங்கு மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.தொழுவில் ‘மஞ்சி’ எனப்படும் கோயில் துண்டு கட்டப்பட்டு அவிழ்த்து விடப்படும் காளைகள் பரந்த மைதானத்தில் ஓடுவதும், நின்று விளையாடுவதும், மக்கள் சூழ நடுவில் நின்று பாய்ச்சல் காட்டுவதும்.ரசிகர் கர கோஷத்திற்கிடையே மாடு பிடி வீரர்கள் வியூகம் வகுத்து காளையை அணைத்து துண்டை அவிழ்ப்பதும் பார்க்க கண் கொள்ளா காட்சி ஆகும்.