எங்களின் நோக்கம் எங்களை பற்றி எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சிவகங்கை மக்களுக்கு செய்திகள், படங்கள் மற்றும் கருத்துகளை வழங்க வேண்டும் என்பதே! எந்த ஒரு விளம்பரமோ, ஆதாயமோ அடைவது எங்கள் நோக்கம் அல்ல. அதனால் தான் தொடர்ந்து உங்கள் மத்தியில் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது.
சிவகங்கை சீமை (Sivagangai Seemai) முகநூல் பக்கம் சரியாக மே மாதம் 9-ஆம் தேதி 2011 ஆண்டு (9 May 2011) தொடங்கப்பட்டது.இப்போது 1 லட்சம் லைக்குகளைப் பெற்று,இன்று பேஸ்புக்யில் இருக்கும் அனைத்து சிவகங்கை பக்கங்களுக்கும் நமது பக்கம் முன்னுதாரனமாக உள்ளது. ஏதோ விளையாட்டாக முகநூல் பக்கத்தை (Facebook Page) தொடங்கினோம் என்று இல்லாமல் முகநூலில் இருக்கும் சிவகங்கை சீமை நண்பர்களுக்கு நமது ஊர் திருவிழா படங்கள், கோவில்கள், ஊரை சுற்றியுள்ள இயற்கை சுழல்கள் மற்றும் சிவகங்கையின் அன்றாட நிகழ்வுகள், முக்கிய செய்திகள் என்று அனைத்தையும் பதிவு செய்திருக்கிறோம். மேலும், சிவகங்கை சீமை நண்பர்கள் தரும் பதிவுகளை தொடர்ந்து நம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறோம்.தற்போது நம்ம சேவை ட்விட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம்( Instagram), யூடியூப்(Youtube),இணையதளம்( Website) என சமூக இணையதளங்கள் மூலம் பதிவு செய்து வருகிறோம்.வெளிநாடு, வெளியூரில் வாழ்பவர்கள், முக்கியமாக அரபு மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்கள் நமது பக்கத்தின் மூலமாக செய்திகளை பார்ப்பதாக தெரிவித்திருந்தனர். நண்பர்களி டம் இருந்து வரும் பாராட்டுகள் மற்றும் ஆதரவுகளை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இவை தொடர்ந்து செயல்பட ஒரு தூண்டுகோலாக உள்ளது.ஆரம்ப காலங்கில் நம் பக்கத்தில் ஒருசில பதிவுகள் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்பு, அதிலிருந்து மாறுபட்டு தாய் மொழியாம் தமிழில் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்ய ஆரம்பித்தோம், பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்! எங்களின் பதிவுகளை கஷ்டப்பட்டு பதிவு செய்யவில்லை. இஷ்டப்பட்டு பதிவு செய்கின்றோம். உங்கள் ஆதரவை இப்போது போல எப்போதும் தாருங்கள்..!