குடிக்க சொட்டு தண்ணீர் இல்லை-(TAMIN)கிராபைட் ஆலையால் சிவகங்கை அருகே கிராமங்களில் கேள்விக்குறியாகும் நிலத்தடிநீர்!

0
1319

சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட (சிவகங்கை அமைச்சர் திரு.பாஸ்கரன் அவர்களின் சொந்த ஊரான தமராக்கி அருகே) கூட்டுறவுப்பட்டி, சிவல்பட்டி, உசிலம்பட்டி, முனியாண்டிபட்டி ஆகிய கிராமங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பகுதிகளில் நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது, பல இடங்களில் 500அடி ஆழ்துளை கிணறு(போர்) அமைத்தும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. இதற்கு முக்கிய காரணமாக மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுவது தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு சொந்தமான கிராபைட் ஆலை, சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டி அருகே கோமாளிபட்டியில் அமைந்துள்ளது. இங்கு பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமத்தில் இருந்து கிராபைட் பிரித்தெடுக்கப்படுகிறது. தாதுவை அரைத்து, கிராபைட் பிரித்தெடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீரை ஆழ்துளை கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சி எடுத்து 1994ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறார்கள்.900 ஏக்கர் பரப்பளவில் கோமாளிபட்டி, தேவனிப்பட்டி, ஊகுளத்துப்பட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, காரம்பட்டி, மீனாட்சிபுரம், காராம்போடை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம எல்லை வரை கிராபைட் கனிமம் பரவியுள்ளது. இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிரா பைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது.

அரசு இப்போதாவது விழித்துக்கொண்டு இந்த ஆலையை மூடி, தண்ணீர் மற்றும் நிலத்தடிநீர் உயர்வதற்கு முயற்சி எடுக்கவேண்டும், அப்போவதாவது இந்த ஊர் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று பார்ப்போம்!!!???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here