சிவகங்கை சீமை மண்ணின் மைந்தன் அண்ணன் கஞ்சா கருப்பு

0
1053

தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச கல்வி தந்து கொண்டு இருக்கிறார் நடிகரான ஒரு படிக்காத மேதை…பாலா அண்ணன் உயிர் கொடுத்தார்,
அமீர் அண்ணன் உடல் கொடுத்தார்.அழியா நினைவுகளாய் கஞ்சா கருப்பு அண்ணன் இல்லத்தின் பெயர் “பாலா அமீர்” இல்லம்

சென்னையில் மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் நகரில் உள்ள சூலைப்பள்ளம் முக்கியமானது. இந்த பகுதியில் மழை வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில், வெள்ளப்பாதிப்பில் இருந்து இந்த பகுதி முழுமையாக மீண்டும் வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். இந்த பகுதியில் நடிகர் கஞ்சா கருப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு உணவகம் திறந்துள்ளார். அதற்கு கவிஞர் கிச்சன்-கஞ்சா கருப்பு என்று பெயர் வைத்துள்ளார். இந்த ஹோட்டலில் புரோட்டா, பிரைட் ரைஸ், பிரியாணி என பல உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.இதுபற்றி கஞ்சா கருப்பு கூறுகையில், சூலைப்பள்ளம் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அதனால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் கவிஞர் கிச்சன் ஜெயங்கொண்டானுடன் இணைந்து இந்த ஹோட்டலை திறந்திருக்கிறேன். இதில் மற்ற ஹோட்டல்களில் கொடுப்பதில் இருந்து பாதி விலைக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறோம். லாப நோக்கம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஹோட்டலை திறந்திருக்கிறேன். இந்த பாதி விலை ஹோட்டலை தொடர்ந்து நடத்துவேன். இது எனக்கு மனதிருப்தியை கொடுக்கிறது என்கிறார் கஞ்சா கருப்பு.விஜய் தொலைக்காட்சியின் Vijay Television பிக் பாஸ் (Big Boss Tamil) நிகழ்ச்சிக்கு அவர் தன் யதார்த்தமான மொழி நடையில் வழங்கிய ஒரு காணொளி!

https://www.facebook.com/SivagangaiSeemaiOfficial/videos/1754729497872240/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here