விருதுகள் மற்றும் சான்றிதழ்களின் நாயகி உமாமஹேவரி

0
1320

விருதுகள் மற்றும் சான்றிதழ்களின் நாயகி உமாமஹேவரி ( எட்டாம் வகுப்பு,வயது 13) 34 சான்றிதழ்கள் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை

இளம் வயதிலேயே பெண்ணாக இருந்தாலும் தைரியமாக பல ஊர்களுக்கும் ஆசிரியைகள் ஒத்துழைப்புடன் போட்டிகளுக்கு சென்று பரிசுகளை குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்தவர்

தமிழ்நாடு அண்ணா கோளரங்க போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று அசத்தியவர்

அபிராமி அந்தாதி ,திருக்குறள் நடனத்தில் கலக்கும் மாணவி

மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம்,நடனம் என பங்கேற்கும் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார் ஒரு மாணவி.அவரை பற்றி பார்ப்போமா ?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் வகுப்பு மாணவி உமாமகேஸ்வரி .இவரது தந்தை அழகுராஜ் .தாய் செல்வி ஆவார்.சிறு வயதில் இருந்தே ( இப்போதே சிறு வயதுதான் ) ஓவியம்,பேச்சு,நடனம் ,கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் கொண்டார்.சிறுவயதிலேயே ஆள் ரவுண்டராக திகழும் இவர் பள்ளியில் மட்டுமல்ல வெளியிடங்களில் நடக்கும் விழாக்களிலும் இவரது கணீர் பேச்சு பார்வையாளர்களை கவரும்.பள்ளி மாவட்ட ,மண்டல ,மாநில அளவிலான போட்டிகளில் சான்றிதழ்கள் பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்தும் விநாடி வினா ,ஓவிய போட்டிகள்,கணித போட்டிகள் ,தமிழக மின்சாரவாரியத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவிய போட்டிகள், பல ஆன்மீக குழுக்கள் ,விழா கழகங்கள் ,சேக்கிழார் விழா குழு,கந்தசஷ்டி விழா கழகம் ,தமிழ் சங்கங்கள் ,பல் சமய உரையாடல் ,பணிக்குழு,பேச்சுபோட்டிகள் ,இந்து சமய அறநிலைய நடத்தும் பாவை விழா ,சனாதன தர்ம மடலாயம் ,புத்தக திருவிழாக்கள் ஆகியனவற்றில் நிகழ்த்தும் பேச்சு போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் பெற்று வந்த பெருமை கொண்டவர்.

மேலும் பத்திரிக்கை துறைகள் நடத்துகிற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளது இவரது தனி சிறப்பு.மத்திய அரசின் ஆற்றல் சேமிப்பு,எரிசக்தி துறை,மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்துகிற மழை நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவிய போட்டிகள்,ஆயுள் காப்பீட்டு கழகம் நடத்தும் ஓவிய போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டும்,மெடலும் ,சான்றிதல்களும் குவித்து வருகிறார். தேவாரம்,திருவாசகம்,பெரிய புராணம் பல நூல்கலையும் படித்து இளம் வயதிலேயே ஆன்மீக பாடல்களையும் அறிந்து வருகிறார்.திருக்குறளை தனது நாட்டியத்தின் வாயிலாக அனைவரையும் ஈர்க்க கூடியவர்.அபிராமி அந்தாதி பாடல்களுக்கும் இசையுடன் நடனம் ஆடகூடியவர்.பாடல்களை திறம்பட ஒப்புவிக்கும் ஆற்றல் மிக்கவர்.

பல்வேறு போட்டிகளில் பரிசு பதக்கம் சான்றிதள்கள் பெற்று சிறப்புடைய மாணவி உமாமகேஸ்வரி ஆலயங்கள் ,உண்டியல் எண்ணும் பணிகள் ,சமூக பணிகள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறார்.இவர் தொட்டதெல்லாம் வெற்றிதான்.வெற்றி மீது வெற்றி வந்து இவரை இவரது திறமையால் வந்து சேருகிறது.படிப்பு,போட்டிகள் அனைத்திலும் ஊக்கமுடன் உழைக்கும் இவரது செயல்பாடு பாராட்டும்படி உள்ளது.

இது குறித்து மாணவி உமாமகேஸ்வரியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில் எனது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியைகள்

ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் , மாணவர்களின் ஒத்துழைப்புடனும் வீட்டில் பெற்றோர்களின் ஊக்கம் ஆகியவற்றுடன் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறேன்.திருச்சி,மதுரை,சென்னை போன்ற பல்வேறு ஊர்களுக்கு இப்போதுதான் முதல் முறையாக போட்டிகளில் கலந்து கொள்ள சென்று வந்துள்ளேன்.இதுவரை இந்த ஊர்களுக்கு சென்றது இல்லை.எனது ரேஷன் கடையில் வேலை செய்துதான் என்னை படிக்க வைக்கிறார்.எனது பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன் ஆசிரியைகள் உதவியுடனும் பல்வேறு போட்டிகளுக்கும் பல ஊர்களுக்கும் சென்று வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.வரும்காலத்தில் சிறந்த பேச்சளாராகவும் ,ஓவியராகவும் வரவேண்டும் என்பதே எனது ஆசை.அதற்கான உழைப்பையும் வெளிப்படுத்தி வருகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here