மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள் : பரம்பரையாக தொடரும் ஒற்றுமை திருவிழா!

0
493
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடலில் உள்ள பாத்திமா நாச்சியார் பள்ளி வாசலில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு செப்.22இல் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி மத நல்லிணக்க விழாவாக இந்துக்கள் பூக்குழி இறங்கி வருகின்றனர்.முதுவன்திடலில் முற்றிலும் இந்துக்களே வசிக்கின்றனர். இக்கிராமத்தில் பாத்திமா பள்ளிவாசலை அனைத்து தரப்பினரும் வழிபடுகின்றனர். இப்பகுதியினர் அனைத்து பணியையும் பள்ளிவாசலில் வணங்கிவிட்டு தான் தொடங்குகின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் முதுவன்திடலில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்துள்ளனர். பிழைப்பு தேடி பலரும் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்த போது இரு சமூக பண்டிகைகளும் கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது முஸ்லிம்கள் வெளியேறிய போதும் இன்று வரை, இங்குள்ளவர்கள் இந்த பண்டிகையை கடைபிடித்து வருகின்றனர். மொகரம் நாளுக்காக ஒரு வாரம் முன்பிருந்தே காப்பு கட்டி விரதமிருக்கின்றனர். மொகரம் நாளன்று இரவு 3:00 மணிக்கு கண்மாயில் நீராடி மாலை அணிந்து பள்ளிவாசல் முன் உள்ள திடலில் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பள்ளிவாசல் முன் முக்காடிட்டு தலைமீது தீ கங்குகளை வாரி போட்டு கொண்டனர். இதன் மூலம் தங்களை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. அரை நுாற்றாண்டை கடந்து இன்று வரை நடைபெறும் மொகரம் திருநாள் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here