பெரிய திரையானாலும், சின்னத்திரையானாலும் காமெடிக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.அந்தவகையில் அனைவரையும் ரசிக்கவைக்கும் ஒரு காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு.இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் இறுதிச்சுற்று திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நவீன், சதீஷ், முல்லை, கோதண்டம், குரேஷி, நிஷா, பழனி ஆகியோர் பங்கேற்றனர்.இதில் யாரும் எதிர்பாராத விதமாக அசத்தி நமது சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குரேஷி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.