மிகவும் மோசமான திருப்புவனம் – நரிக்குடி சாலை!

0
555

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் – நரிக்குடி சாலை முழுவதும் முற்றிலும் சேதமடைந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் விபத்தை ஏற்படுத்தும் பகுதியாக உள்ளது. ஏற்கனவே மதுரை – இராமேஸ்வரம் நான்கு வழித் தேசிய நெடுஞ்சாலைக்கு தேவையான கட்டுமான பொருள்களை கனரக வாகனங்கள் ஏற்றி சென்று வருகின்றன.
இதனால் முன்பு போல சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதை சமாளிப்பதற்காக சாலையில் உள்ள குண்டு குழிகளில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்ப்ட்டு உள்ளனர்.

இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனனர். தகுந்த நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க் வேண்டுமென்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here