மானாமதுரையில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை கோலாகல திருவிழா!

0
1476

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என்.நடுநிலைப்பள்ளியில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டின் முதல் நாளில் பள்ளி திறக்கப்பட்டது.ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் சந்தனம் குங்குமம் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்று பள்ளி நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். முதலாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த சுமார் முப்பது மாணவர்கள் அருகில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அவர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து புதிய சீருடை ராஜகிரீடம் அணிவிக்கப்பட்டு புதிதாக அனைவருக்கும் சிலேட் எழுதும் குச்சி பெட்டி வழங்கப்பட்டு மேள தாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட அழகிய டேபிள் சேர்களில் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு கல்வி பணி தொடங்கி வைக்கப்பட்டது.அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள் காலணிகள் ஒன்று முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் சத்தியசீலன் தாளாளர் அன்பழகன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சண்முகம் தெட்சிணாமூர்த்தி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தங்கராசு சத்தியமூர்த்தி போஸ் சுந்தரராசு உறவின்முறை நிர்வாகிகள் தெட்சிணாமூர்த்தி முருகேசன் சுப்பிரமணியன் கணேசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூங்கொடி டேபிள் நன்கொடையாளர் சங்கு சுப்பிரமணியன் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here