சிங்கம்புணரி பகுதியில் 50 ஆண்டுகளாக தென்னை நார் கயிறுகள் தயாரிக்கும் பணியில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடைக் காலங்களில் கதிர் கட்டு கயிர்கள், லாரிகளில் பயன்படும் சாரக்கயிறுகள், கொச்சைக்கயிறு என ஐந்து அடியிலிருந்து நூறு அடி நீளம் வரை பல வகையான கயிறுகள்தயாரிக்கப்படுகின்றன. இவை வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இரண்டு பிரி, மூன்று, ஐந்து பிரிகள் என கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை மாவட்டந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும் வழக்கம். இதற்காக பல்வேறு ஊர்களில் தேர்களை இழுக்க தேர்வடக் கயிறுகள் தேவைப்படும். இதனால், கயிறுகளின் தேவை அதிகரிக்கும். இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் நாலு இன்ச் சுற்றளவு முதல் ஒன்பது இன்ச் சுற்றளவு வரையிலான தேர் வடக்கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. பெரிய தேர்வடக் கயிறுகள் தயாரிக்க 10 பேர் உழைப்பிற்கு ஒருவார காலம் வரை ஆகிறது.
இது குறித்து கயிறு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “பெரும்பாலன கோயில்களில் உள்ள தேர்களுக்கு இரும்புச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளன. தேர்களை இழுக்க இரும்புச் சங்கிலிகளைப்பயன்படுத்துவதா