(31/03/2018)இன்று காலை மணி 11.45.க்கு மதுரையிலிருந்து சிவகங்கைக்கு வரும் அரசு விரைவுப் பேருந்தில் சிவகங்கை வந்தேன். அந்த அரசு பேருந்தில் படத்தில் காணும் விக்டர் ஜெயபாலன் என்பவர் நடத்துனராக வந்தார். அன்னாரின் கனிவான பேச்சு, பயணிகளிடம் அவர்காட்டிய மனித நேயம் அடியனை மட்டுமல்ல பலரின் கவனத்தையும் கவர்ந்தது. பலர் அவரை பாராட்டியதுடன் தங்களைப் போன்று அரசு பேருந்துகளில் அனைத்து நடத்துனர்களும் அன்பு , பண்புடன் எங்களைப்போன்ற சாதாரண பயணிகளிடம் நடந்துகொண்டால் பயணம் இனிதாக இருக்குமே என வாழ்த்தினார்கள். சிவகங்கை பணிமனையில் இவரைப்போன்று பயணிகளிடம் அன்பும், பண்பும் என்றும் காட்டிவரும் நடத்துனர்களை பாராட்டலாமே!???