பெரிய நரிக்கோட்டை மாதா கெபி கண்ணாடி உடைக்கப்பட்டு மிரட்டல்

0
511

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.அத்திருவிழா சப்பரப்பவனியை நிறுத்த இந்துமுண்ணணி மற்றும் RSS அமைப்பினர் பெட்டிசன் செய்தனர்.இப்பிரட்சனை 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு (03-02-2018) அன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த வருடமும் அந்தப்பிரட்சனை எழும்பியுள்ளது. இதைப்பற்றிய சமாதானக்கூட்டம் (01-02-2018) அன்று சிவகங்கையில் RDO தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் வழக்கம் போல் திருவிழாவை கொண்டாட அனுமதி கிடைத்தது.இக்கூட்டத்தில் இந்துமுண்ணி அமைப்பினர் மற்றும் RSS சமாதானத்திற்கு வரவில்லை. ஆகவே,திருவிழாவில் பிரட்சனை ஏற்படுத்தும் வண்ணம் திருவிழாவிற்கு முந்தய நாள் (02-02-2018) அன்று இரவு 9.30 மணிக்கு காளையார் கோவில்குட்பட்ட பெரிய நரிக்கோட்டையில் அமைந்திருக்கும் அன்னை வேளாங்கண்ணி தாயின் கெபியின்(சர்ச்) கண்ணாடியை உடைத்தனர்.

 

மேலும் திருவிழாவிலும் இக்கலவரத்தை ஏற்படுத்துவோம், திருவிழாவிற்கு வரும் மக்களை வெட்டுவோம் என்று சத்தமிட்டும், சப்பரம் ( தேர்பவனி ) நடத்தினால் தேவாலயங்களை உடைப்போம் என்று துண்டறிக்கையை போட்டுவிட்டு தப்பியோடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here