பாதாளச்சாக்கடை – குமுறும் காரைக்குடி மக்கள்!

0
1076

குன்றுதோறும் குமரன் இருப்பான் என்பார்கள்,இன்று காரைக்குடியே குன்றுகள் சூழ் நகரமாக (நரகமாக) மாறி நிற்பது கொடுமை.குமரனைத்தான் காணவில்லை..??? பாதாளச்சாக்கடை என்ற பெயரில் கடந்த பல மாதங்களாக காரைக்குடிச் சாலைகள்,தெருக்கள் கற்பழிக்கப்பட்டு கதறிக்கொண்டிருப்பது கண்கூடு வேலையை ஓரிடத்தில் முடித்த பின் ரோடு போட்டு அடுத்த இடத்தில் தோண்டலாம். தோண்டிக்கொண்டே போவதும் தோண்டிய இடத்தில் மீண்டும் மீண்டும் தோண்டுவதும்.குவிக்கப்பட்ட மண் மேடுகளை (குன்றுகளை) பள்ளத்தில் போட்டு நிரவாமல் அடுத்து தோண்ட ஓடுவதும் தொடர்கதை. என்ன முறையோ இது புரியவில்லை. விவேக் வசனம் போல் ஆகிவிட்டது. ஒரு மழை நிறைவாகப் பெய்தால் போதும் புதைகுழியில் தான் நம் வாழ்க்கை. குழந்தைகளும் பெரியவர்களும்,வாகன ஓட்டிகளும் விழுந்தெழுந்து பூமித்தாயை ரத்தக்களரியோடு முத்தமிட்டுத் தொடர்வது வாடிக்கை ஆகிவிட்டது. கேட்பதற்கு நாதி இல்லாத ஊராகிவிட்டது. எத்தனை பேர் முழக்கமிட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக விடாமல் ஒழுங்கின்றி வேலையைத் தொடர்வோரைப்பாராட்டத்தான் வேண்டும்., வேறு என்ன செய்வது….மணல் தட்டுப்பாடு? காரைக்குடியில் இல்லை.எங்கு பார்த்தாலும் மண் மயம்…இந்நிலை தொடர்ந்தால் கல் குடி,மண்குடி,புதை குழி..ஆகும் காரைக்குடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here