பாகனேரி மஞ்சுவிரட்டு

0
537

சிவகங்கை மாவட்டத்தில் முதல் மஞ்சுவிரட்டு தை மாதம் 3 ம் தேதி,சிராவயல் என்றால், கடைசி மஞ்சுவிரட்டு ஆனி மாதம் பாகனேரி புல்வநாயகி அம்மன் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுவது தான்.

சினிமா மோகம் கொண்ட நம் மக்கள் பாணியில் சொல்வது என்றால் ரஜினிகாந்த் நடித்த முரட்டு காளை படத்தில் இடம் பெற்ற “பொதுவாக என் மனசு தங்கம் ” பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது இதே பாகனேரி மஞ்சுவிரட்டில் தான்..மஞ்சு விரட்டு என்பது பழமையான ஒரு வீர விளையாட்டு. ‘முரட்டுக் காளை’யில் ரஜினி மாட்டை வீரத்துடன் அடக்குவது போன்று காட்சி அமைத்திருந்தார் பஞ்சு அருணாசலம். மஞ்சு விரட்டு மாட்டை அடக்குகிற வீரனுக்கு பெண்ணை திருமணம் செய்துகொடுப் பது என்பது அந்த வீரத்துக்குக் கொடுக்கும் விருது. இந்த மஞ்சு விரட்டு இன்றைக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிவாசல், சிராவயல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. அந்த ஊர்களுக்குப் போய்ப் பார்த்தோம்.

மஞ்சுவிரட்டு முடிந்துவிட்டது என்றும், அடுத்த மாதம் பாகனேரியில் நடக்கும் என்றும் சொன்னார்கள். பாகனேரிக்குப் போனோம். அங்கு காங்கிரஸ் தியாகி உ.சுப்ரமணியம், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திருஞானம், உ. பில்லப்பன், கிருஷ்ணவேணி தியேட் டர் தியாகராஜன் போன்றவர் களைச் சந்தித்தோம். ‘‘மஞ்சுவிரட்டை படம் எடுக்க எல்லா உதவிகளும் செய்து தருகிறோம்’’ என்றார்கள். ‘‘எங்க ஊர்ல ஏவி.எம். ஷூட்டிங் நடக்குறது எங்களுக்கு பெருமை. ரஜினி வருவது எங்க ஊருக்கே பெருமை’’ என்று மகிழ்ந்து போனார்கள். அவர்களுடைய செட்டிநாட்டு விருந்தோம்பலை இன்றைக்கும் நாங்கள் மறக்கவில்லை.

மஞ்சு விரட்டை படம் பிடிக்கத் தயாரானோம். தாரை தப்பட்டை முழங்க கொட்டடியில் இருந்து காளைகளைத் திறந்துவிட்டார்கள். ஆக்ரோஷத்தோடு காளைகள் திடலுக்கு ஓடி வந்தன. அதனை வீரர்கள் மரித்து, அடக்குவதற்குப் போராடினார்கள். சில காளைகள் வீரர்களின் வயிற்றில் குத்த, அவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். சில இளைஞர்களை காளைகள் பந்தாடின. இந்தக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பாபு சாருடன் இணைந்து கேசவன் மற்றும் பிரசாத்தும் ஆளுக்கொரு கேமரா மூலம் படம்பிடித்தனர். எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் ரஜினியை களத்தில் இறக்கினோம். சீறிப் பாயும் காளைகளோடு ரஜினியும் சீறிப் பாய்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here