நாட்டரசன்கோட்டையில் புகைவண்டி நிலையம் இருந்தது உங்களுக்கு தெரியுமா?

0
490

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தை சேர்ந்தவர்கள், நாட்டரசன் கோட்டைக்கு வந்துதான், சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி போன்ற ஊர்களுக்கு செல்கின்றனர். நாட்டரசன்கோட்டையில் உள்ள பள்ளிகளில் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகிஅம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களும், கவிச்சக்கரவர்த்தி கம்பர் சமாதியும் உள்ளது. இவைகளைக் காண தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நாட்டரசன்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள், காரைக்குடி, சிவகங்கை கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயிலுகின்றனர். திருச்சி-இராமேஸ்வரம், இராமேஸ்வரம்-சென்னை உள்ளிட்ட ரயில்கள் நின்று சென்றது. இந்நிலையில், ரயில்வே ஸ்டேசன் மூடப்பட்டு, அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here