காரைக்குடியில் வீடு புகுந்து 7 வயது சிறுமி பலாத்காரம்

0
1576

காரைக்குடி அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தென்மாவட்டங்களில் சிறுமிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் குற்றங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, புதுச்சேரியை தொடர்ந்து தென்மாவட்டங்களிலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காரைக்குடி அருகே மேலமணக்குடியை சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். 2 தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தனது தாயுடன் சிறுமி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது, எதிரே வந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கண்டதும், சிறுமி அச்சமடைந்து அழுது கொண்டே தாயை கட்டிப்பிடித்து கொண்டாள். இதனால் சந்தேகமடைந்த தாய், வீட்டிற்கு சென்றதும் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அச்சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி அழுது கொண்டே கூறியிருக்கிறாள். மேலும் இதை யாரிடமாவது கூறினால், கொலை செய்து விடுவேன் என்றும் அச்சிறுவன் மிரட்டியதாகவும் சொன்னாள்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து சாக்கோட்டை போலீசில் ேநற்று முன்தினம் இரவு புகார் செய்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுவனை நேற்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி, 17 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here