புதிய மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி. மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு,புத்தகம்,சீருடை வழங்கும் விழா.
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி திறந்து புதியதாக சேர்ந்த மாணவர்களை மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்களை கொண்டு மாலை அணிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஊர்வலமாக அழைத்து வந்து ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.தமிழக அரசின் விலையில்லா
சீருடை,புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கபட்டது. பள்ளி ஆசிரியர் கருப்பையா , ஆசிரியைகள் முத்து மீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் வரவேற்பு நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.