நாட்டரசன்கோட்டை “செவ்வாய் பொங்கல்’: நகரத்தாரின் பாரம்பரிய அடையாளம்​

0
449
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், 150 ஆண்டுகளாக நகரத்தார் சமூகத்தினரால் பின்பற்றப்படும், “செவ்வாய் பொங்கல்’ விழா.தை பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாயில், இந்த ஊரை சேர்ந்த நகரத்தார் ஒன்று கூடி, பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன், பொங்கல் வைத்து வழிபடுவர். இதற்காக புள்ளி (குடும்பம்) வாரியாக வரி வசூல் செய்வர். இங்கு உள்ள 880 குடும்ப தலைவர்கள் பெயரை எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கி, முதியவரை எடுக்க செய்வர். இதில் வரும் குடும்பத்தினர் முதல் பொங்கல் வைப்பர்.

வரன் தேடுதல்: இங்கு பிறந்த நகரத்தார்கள் தொழில் நிமித்தமாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கின்றனர். இவர்கள் தவறாமல் “செவ்வாய் பொங்கல்’ விழாவில் கலந்து கொள்வர். பல மாதங்கள் கழித்து உறவினர்களை பார்ப்பதால், குசலம் விசாரிப்பர். அரசல், புரசலாக பெண், மாப்பிள்ளை தேடும் சம்பிரதாயமும் இவ்விழாவில் அரங்கேறும்.ஆண்டுதோறும் இவ்விழாவுக்காக வெளிநாட்டு பயணிகளை, சுற்றுலாத்துறையினர் வரவழைப்பர். பாரம்பரிய விழா, நகரத்தார்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துரைப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here