ஆவிந்திப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தாலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்காமல் சுய கௌரவம் பார்த்து அருகில் உள்ள வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். ஆங்கிலக் கல்வியின் மோகமும் இதற்கு காரணமாக உள்ளது.இதனால் இந்தப் பள்ளியில் தற்போது முதல் வகுப்பில் ஒரு மாணவியும் 5ம் வகுப்பில் ஒரு மாணவனும மட்டும் படித்து வருகின்றனர். மாணவர்கள் இல்லாத பள்ளியாக இருப்பதால் இந்தப் பள்ளியை மூடிவிடக் கூடாது என்றும் பொதுமக்கள் ஆங்கில மோகத்தை விட்டு விட்டு தரமான கல்வியை மட்டும் நாட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.