இந்தி திணிப்பை எதிர்த்து,துப்பாக்கி சூட்டுக்கு பலியான சிவகங்கை இராசேந்திரன்

0
429

இவர் சிவகங்கை அருகிலுள்ள கல்லல் என்ற ஊரைச் சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி மாணவனாகச் சேர்ந்து பயின்று வந்தார்.1965 சனவரி 27ஆம் நாள் இந்தி திணிப்பை எதிர்தது, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தில் மொழி உணர்வோடு முழக்கமிட்டு சென்றார் இராசேந்திரன். அடக்கு முறையின் ஒரு பகுதியாக நடந்த காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இராசேந்திரன பலியானார்.அவரின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களால் இராசேந்திரனக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.இராசேந்திரனின் மொழிப்போர் தியாகம் வணங்கப்பட வேண்டியது.அவரின் தியாகத்தை உலகறிய செய்வது நம் கடமை. அதன் வழி குழந்தைகளிடம் மொழிப்பற்றை வளர்க்கவேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here