சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ‘சாமக்கொடை’ திருவிழா

0
594

புகைப்பட நன்றி தினகரன்

சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதமான ‘சாமக்கொடை’ திருவிழா நடந்தது. அதில் 365 கருப்பு ஆடுகளை வெட்டி சமைத்து, விடிய, விடிய கறி விருந்து நடந்தது.சிவகங்கை அருகே உள்ள திருமலையில் தண்ணீர் நிறைந்துள்ள கண்மாயின் பிரதான மடையில்,மடைக்கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு மடை கருப்பசாமிக்கு சிலை கிடையாது. சாமியை நினைத்து அரிவாள், மணிகளை நேர்த்திக்கடனாக செலுத்தி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஏராளமான அரிவாள்கள் மட்டுமே நட்டு வைக்கப்பட்டு, சுவாமியின் உருவம் இல்லாத இக்கோயிலில் அந்தந்த ஆண்டின் விளைச்சலுக்கு நன்றி செலுத்தவும், வரும் ஆண்டின் செழிப்புக்கு உத்தரவு கேட்கவும் ஆண்டு தோறும் சித்திரையில் மடை கருப்பசாமிக்கு சாமக்கொடை திருவிழா நடத்தப்படும்.

நேர்த்திக்கடன் செலுத்த அரிவாள், மணி, கருப்பு நிற வெள்ளாடுகளுடன் அவர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மலை கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தம் எடுத்து வந்து ஒரு மண் பானையில் பொங்கலிட்டனர். தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து ஆடுகள் பலியிடப்பட்டன. 328 ஆடுகள் வரிசையாக பலியிடப்பட்டன. பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டது.பின்னர் பொங்கல், சமைத்த இறைச்சி, வெட்டப்பட்ட ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

இரவு 12 மணிக்கு ஆரம்பமாகும் ஒரே பந்தியில் எத்தனை பேர் வந்தாலும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கறி.இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.நாலு பேர் சேர்ந்தாலே சண்டை போடும் இடத்தில் 6000 பேர் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் போலிஸ் பாதுகாப்பு இல்லாமல்.எஞ்சிய இறைச்சியை அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைத்தனர். ஆடுகளின் தோல்களை தீயிட்டு எரித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here