சிறியூர் யாகப்ப அம்பலம் – மறவமங்கலத்தில் நடந்த போரில் சிவகங்கை சீமையின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம் ஆவார்

0
2442
  • 1690-களில் ராணி மங்கம்மாள், கிழவன் சேதுபதி காலத்தில் சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமானவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினர். அப்படி மதம் மாறியவர்களில் காளையார்கோவில் அருகே உள்ள சிறியூர் கிராமத்தில் சவாியப்பதேவர் குடும்பமும் ஒன்று. அவரின் மகன் யாகப்ப அம்பலம் அவர்களின் கல்லறை சிறியூர் கிராமத்தில் உள்ளது.

குண்டாக்குடை கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோயிலில் இவருக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியார் காலத்தில் மங்கல நாட்டிற்கு இவர் சிற்றரசராக வாழ்ந்தார். இவர் வெட்டிய கால்வாய் தான் நாட்டரசன்கோட்டையிலிருந்து மறவமங்கலம் வழியே செல்லும் நாட்டார் காய்வாய். கிழக்கு இந்திய கம்பெனிக்கும் சிவகங்கை சீமைக்கும் நடந்த முக்கியபோர்களில் மறவமங்கலம், திருப்புவனத்தில் நடந்தவை முக்கியமானவை. இதில் மறவமங்கலத்தில் நடந்த போரில் சிவகங்கை சீமையின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம் ஆவார். காளையார்கோவில் தெப்பகுளத்தின் மையமண்டபத்தில் உள்ள தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை கரையிலிருந்தே கொண்டையோடு கொய்யவா, குலையோடு கொய்யவா என்று மருது சகோதரர்களிடம் கேட்டு அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அதற்கு அவர் அன்று பயன்படுத்திய ஆயுதம் தான் வளரி.

நன்றி: ரமேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here