சிங்கப்பூர் செல்லும் மானாமதுரை மண் பானைகள்

0
1414

மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண் பொங்கல் பானைகள், மற்றும் குழம்பு சட்டிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்கள் உலகப்புகழ் பெற்றவை ஆகும். இங்கு சீசனிற்கு தகுந்தாற் போல் தயாரிக்கபடும் பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் மானாமதுரையில் 3 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால்தயாரிக்கப்படும், கர்நாடக இசைக்கருவியான ‘கடத்தை’ இசைக்கலைஞர்கள் இங்கு தான் வாங்கி செல்கின்றனர்.சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோயில்களில் நடக்கும் பொங்கல் விழாவிற்காக தற்போது மானாமதுரையில்பொங்கல் பானைகளை செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். இதற்காக மண்பாண்ட கலைஞர்கள்சிறிய அளவிலான பொங்கல் பானைகளை தயாரித்து அனுப்பி வருகின்றனர்.மேலும் தற்போது வெளிநாடுகளில் பலர் மண்பாண்ட சமையலுக்கு திரும்பியுள்ளதால் குழம்பு சட்டிகளும் அதிகளவில் தயாரித்து அனுப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here