கீழடி கிராமம் – சங்க காலத் தமிழகம்.

0
707

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின், கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.இந்த இடம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது (கிமு 500) என்றும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த்து என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கருதுகிறது.அதாவது, வடக்கே பிம்பிசாரரின் ஹர்யங்கா வம்சம் உருவாகும் முன்பே, புத்தரின் காலத்தில் தெற்கே தமிழர் நாகரிகம் செழித்திருந்தது என்பதை இது காட்டுகிறது.இந்தக் குடியிருப்புப் பகுதி, வர்த்தகர்கள் பயணத்திற்காகப் பயன்படுத்திய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருந்த்து என்பதை இங்கே கிடைத்துள்ள முத்திரைகள் காட்டுகின்றன.

முதலாவதாக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடமான கீழடி அமைந்துள்ள இடம் ஒரு தோப்பு பகுதி. பொதுவாக இந்த மாதிரி அகழ்வாராய்ச்சி நடைபெறும் என்றால் நிலத்தின் உரிமையாளர் அதற்கு அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்காக மரங்கள், நிலப்பரப்பு அழிக்கப்பட்டு பல குழிகள் தோண்டவேண்டும். இப்படி ஒரு வரலாறு நம் நிலத்தின் அடியில் புதைந்துள்ளதை மனதில் கொண்டு, அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதித்த நிலத்தின் உரிமையாளர் திரு.அர்ஜுனன் அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள்

 

கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன. இதன்மூலம், சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இந்த கட்டடங்கள் செவ்வகம், சதுரம் வடிவிலான செங்கல்கலைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் இப்போதுதான் முதன்முறையாக சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இது கலை வேலைப்பாடுகளுடன் உள்ளது. வெளிநாட்டோடு வாணிபத் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. பலுசிஸ்தானில் கிடைக் கும் சால்சிடோனி, கார்னீலியன், அகேட் போன்ற அரிய வகை மணிகள், அணிகலன்கள் கீழடியில் கிடைத்துள்ளன.வெளிநாடுகளில் இருந்து பண்ட மாற்று முறையில் அந்த அணிகலன்கள் இங்கு வந்திருக்கலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காதணிகளையும், வசதி குறைவாக உள்ளவர்கள் சுடுமண் காதணிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டின் இந்தத் தொல்பொருள் ஆய்வுப்பகுதியின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் கழிவுநீர் அமைப்பாகும். சுட்ட களிமண் குழாய்களைக் கொண்டு நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, ஹரப்பா பகுதியில் உள்ளதை ஒத்திருக்கிறது. இதன் கழிவுநீர் அமைப்பு, சுமார் 8000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது. அந்தக் காலத்தின் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய போர்ப்படைக் குடியினர் இங்கே வாழந்திருக்கிறார்கள் என்று புலனாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here