காளையார்கோவில் – கிடப்பில் போடப்பட்டது சீமைக்கருவேல மரம் அழிக்கும் திட்டம்

0
769

காளையார்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன இந்நிலங்களைச் சுற்றி அதிகளவு சீமைக் கருவேல மரங்கள் உள்ளன சில மாதங்களுக்கு முன்னாள் சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அழிக்கப்படும் என்று அறிவித்தனர். தற்போது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காளையார்கோவில் ஒன்றியம் 360 கிராமங்களைக் கொண்ட பெரிய ஒன்றியமாக திகழ்கிறது. இங்கு அதிகப்படியான மக்கள் விவாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். விளைநிலங்களில் சீமைக் கருவேல மரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன், நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதால் விளைச்சல் பாதிப்படைகிறது.

சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களைக் காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால், போதிய வசதியில்லாத விவசாயிகள் அழிக்காமல் விட்டுவிட்டனர். இதைகருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன்னால் சீமைக்கருவேல மரங்களை அளிப்பதற்கு அரசு முன்வந்து தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுப்பவர்களிடம் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கான விதி முறைகளை அறிவிக்காமல் ஏலம் விடப்பட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர்பகுதிகளை தோண்டாமலும் விட்டு விட்டனர். இதனால் தற்போது சில மாதங்களுக்கு முன்னால் பெய்த சிறு மழைக்கு அதிகமாக கருவேலமரங்கள் முளைத்து உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்கள் குறைந்து சீமைக் கருவேல மரங்கள் மட்டுமே நிலங்களில் வளரக்கக்கூடிய நிலை ஏற்படும். அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களைக் காப்பாற்ற முடியும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here