சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழாவில் நேற்று, பூக்குழி இறங்குதல், அலகு குத்தி பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், உடம்பில் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில், இதற்கான அலகு குத்துதல் நடக்கிறது. வைரவபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் பக்தர் சாதிக் என்பவர், இந்த பணியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். மிக நேர்த்தியாக அலகு குத்துவதால், பெரியவர் முதல் சிறியவர்கள் வரை நாடி வருகின்றனர். பால் குடத்துக்கு முந்தைய நாள், இவரும் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்துகிறார்.அவர் கூறுகையில், முத்துமாரி ஆத்தாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன்; 100-க்கும் மேற்பட்ட அலகுகள் உள்ளன. இது எனக்கு கிடைத்த பாக்கியம், என்றார்.