காரைக்குடி ஆயிரம் ஜன்னல் வீடு

0
1298

ஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது. இதன் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், “ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு” என்ற அர்த்தத்தில் வரும்.இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப் பார்க்க விரும்பும் அளவுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நகருக்கு நீங்கள் வந்து, இவ்வீட்டைப் பார்க்க விரும்பினால், வழியில் பார்க்கும் யாரைக் கேட்டாலும் வழி சொல்வார்கள்.இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. மேலும், சுமார் 20 கதவுகளும், 100 ஜன்ன்ல்களும் உள்ளன.வீட்டின் சாவியே தோராயமாய் ஒரு அடி நீளம் இருக்கும்.

மிகப்பெரிய அறைகள், விசாலமான நடுக்கூடம், மண்டபங்களையொத்த உணவு பரிமாறுமிடம், பர்மா தேக்குக் கதவுகள், ஜன்னல்கள், இத்தாலி சலவைக் கற்கள், இயற்கை வண்ணப் பூச்சு ஓவியங்கள், முட்டை மற்றும் சுன்னக்கலவை பூச்சு..

விதவிதமான விளக்குகள் என எங்கெங்கும் பிரமிப்பாய் சுமார் 20,000 சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ள இவ்வீடு, 1941-ம் வருடம், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மிக அதிகத் தொகையாக தோன்றிய இது, தற்போது சாதாரணமாகத் தோன்றுகிறது.

(குறிப்பு: இது ஒரு தனியார் உடைமை, உரிய அனுமதி பெற்றுக் காணலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here