காரைக்குடி கழனிவாசல் – கோட்டையூர் சாலையில் இருந்த இரு வேகத்தடைகள் எடுக்கப்பட்ட பின்பு, தொடர் விபத்துக்கள் நடந்து கொண்டிருந்தன. உடனே விபத்துகளைக் குறைக்க, காவல்துறையினர் இரும்பு வேகத்தடை வேலிகளை அங்கு வைத்தனர். இதனால் கடந்த ஆண்டு ஒரு இளைஞன் அந்த இடத்தில் பேருந்தில் மோதி பலியான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, அது வலைத்தலங்களில் பரவியதும், மக்கள் மன்றத்தினர் நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் செய்தோம். ஆனாலும் பலனில்லை. தற்போது கடந்த வாரம் மீண்டும் அதே இடத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது.
உயிர்ப்பலி என்பது வார்த்தையாகப் பார்க்காமல் வலியாக நினைத்துப் பாருங்கள். ஒரு குடும்பத் தலைவரை இழந்த ஒரு குடும்பத்தின் நிலை என்னவாகும்? ஒரு விபத்தில் காயமடைந்த ஒருவரைக் காப்பாற்ற எத்தனை பேரிடம் கையேந்தவேண்டியுள்ளது.விபத்துகள் தவிர்க்கமுடியாதது.ஆனால் அந்த இடத்தில் வேகத்தடை இருந்தால் விபத்து குறையும் எனத் தெரிந்தும், அங்கிருந்து ஒரு அரசியல்வாதிக்காக எடுக்கப்பட்ட வேகத்தடையினை போடாதது யார் குற்றம்? அந்த உயிர்ப்பலிகளுக்கு யார் பொறுப்பு? அந்த பாவபலன்கள் யாருக்கு?சிந்திப்பார்களா?இதோ இன்று மீண்டும் சென்று அந்த இடத்தில் வேகத்தடை கோரி விண்ணப்பித்துள்ளோம். அங்குள்ள உதவிப் பொறியாளர், இன்னும் ஒரு வாரத்தில் போடப்படும் என்ற உத்தரவாதம் கொடுத்துள்ளார்.பார்க்கலாம்…