ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகி உள்ளது!

1
6975

சிவகங்கை மாவட்டம் காரகை்குடி தாலுகா சாக்கோட்டை ஒன்றியம் நாட்டுச்சேரி ஊராட்சி கிடையன்குடி. மணவயல் .கிராமத்தில் இரண்டு சிறிய மின் விசை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. கடந்த மூன்று வருடமாக பழுதாகி உள்ளது அதன் துறை சார்ந்த அனைவரிடம் மனு கொடுத்தோம் எந்த பயனும் இல்லை. கடைசியாக ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது அதில் வட்டாச்சியர் அவர்களிடமும் மனு கொடுத்தோம் அதிலும் பயன் இல்லை. அதைசுற்றியுள்ள கிராமத்திலும் இந்த நிலை கடந்த இரண்டு வருடமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
பெண்கள் குழந்தைகள் என சுமார் 1500 பேர் தண்ணீர் எடுக்க தினமும் 2 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது.
கடந்த மூன்று வருடமாக அதுவும் இல்லை இங்கே உள்ள அனைவரும் குளிக்கவும் , குடிக்ககவும்.தண்ணீரை விலை போட்டு வாங்கும் நிலை உள்ளது.

எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள் விலை போட்டு தண்ணீர் வாங்கி எங்களால் வாழ்க்கை நடத்த முடியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர்.

-ஊர் பொது மக்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here