ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும்.ஒரு பானையின் விலை 30 இல் இருந்து 80 வரை உள்ளது. மண்பாண்ட தொழில் பல இடங்களில் செய்யப்பட்டு வந்தாலும் மானாமதுரை மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.மானாமதுரை மண் அதிக இரும்பு சத்து உடையதாகவும், விரிவடையும் தன்மை உள்ளதாகவும் மண் பானையை எந்நேரமும் குளிர்ச்சியில் வைத்துள்ளது. மண் பானை செய்வதற்கு அதிக அளவில் பெண்கள் தேவைப்பட்டாலும் இன்று பெண்கள் அதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. வருடத்திற்கு 300 குளிர் சாதன பானைகளும்,தண்ணிர் குவளைகளும், பூ சாடிகளும்,பொம்மைகளும் அடுப்புகளும் செய்யப்படுகின்றன.