உத்தரபிரதேசத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தமிழரை கலெக்டராக நியமித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

0
968

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடத்திவருகிறது. முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் உள்ளார். சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிடம் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள 16 கலெக்டர்கள் உள்பட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 43 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.இதில் முதல்-மந்திரி தனது சொந்த மாவட்டமான கோரக்பூருக்கு தமிழ்நாட்டை சேர்ந்த விஜயேந்திர பாண்டியனை கலெக்டராக நியமித்துள்ளார். அவரிடம் தனது மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். விஜயேந்திர பாண்டியன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரைப்போல ஏராளமான தமிழர்கள் அம்மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here