வியப்பின் உச்சம்..இளையோர் சக்தியின் வலிமை..

0
397

ஒரே நாளில் 12,018 விதைப்பந்துகள் தயாரிப்பது சாத்தியமா..?500 அ 1000 தயாரித்துவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார்கள் என எண்ணிச்சென்ற எமக்கு…’ ‘மனத்துக்கண் மாசு இலன் ஆதல்’ என்பதற்குச்சான்றாய் தமது கடின உழைப்பால் காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர்களும்,கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி N.S.S மாணவத்தொண்டர்களும் இலக்கை எட்டி சாதனை புரிந்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது..இன்று தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் வீசப்படும்பொழுது குறைந்தது 5000 மரமாவது மண்ணில் எழும்பும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது..இவ்வரிய நிகழ்ச்சியை துவக்கிவைத்ததில் மிகுந்த பெருமை அடைந்தேன் நான்.சாதனைப்பூக்களாய் மாணவ மாணவியர் மிளிர ஆசி நல்கிய கோவிலூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் , வழிநடத்திய கல்லூரி முதல்வர் முனைவர் செல்லப்பா,திட்ட அலுவலர்கள் பேராசிரியர் ஜெயராஜ் (என் மாணவர்)முனைவர் மதுபாலா,நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தலைவர் AG.பிரகாஷ்,செயலர் கண்ணன், சுற்றுச்சூழல் பாதுகாப்புப்பிரிவுச் செயலர் பிரகாஷ் மணிமாறன்,இயக்கத்தோழர்கள் அத்தனைபேரும் பாராட்டத்தக்கவர்கள்…”

நலமான இளைஞர்..வளமான பாரதம்…உண்மையிலும் உண்மை…தொடரட்டும் சேவை மலரட்டும் மனிதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here