சிவகங்கையில் உள்ள கலைமகள் ஓவியக்கூட மாணவர்கள் அரச மர இலை, புங்கன் மர இலை, பூவரசு மர இலை, தேக்கு மர இலை உட்பட பல் வேறு மர இலைகளில் தமது கற்பனைக்கேற்ற ஓவியங்களை உருவாக்கி வருகின்றனர். பொங்கல் விடுமுறையை உப யோகமாக கழிக்கும் வகை யில் ஓவியப் பணியில் ஈடுபட்டனர்.அதன்படி, இயற்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள் ஆகி யவற்றை இலையில் ஓவியம் தீட்டியுள்ளனர். மாணவர்கள் வெண்பா, இளமாறன், மலர் மன்னன்,கவிமலர், கபிலன், லவன்கங்கேஷ் லிங்கம், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் ஓவியங்களை உருவாக்கி உள்ளனர்.இது குறித்து பயிற்சியாளர் நா.முத்து கிருஷ்ணன் கூறியதாவது: கோடையில் எழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி இலவசமாக கற்றுத் தருகிறேன். மாணவர் களில்அறிவியல், கணிதத்தில் நுட்பமுடையவர் கள்தான் ஓவியம் வரைய முடியும். கோட்டோவியம், பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், தஞ்சை ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம் போன்று இலை ஓவியமும் ஒன்று. இதில், இலையில் உள்ள நரம்புகள் சேதமாகாமல் தாம் வரைய நினைக்கும் ஓவியத்தை பென்சில் உதவியின்றி அவுட்லைன் மூலம் கட்டர் கொண்டு வரையப்படுகிறது. பின்னர், இந்த இலைகளை லேமினேஷன் செய்துவிடுவோம் என்றார்.