டைரக்டர் கண்ணன் ஒரே சமயத்தில் 2 மொழிகளில், ரீமேக் படம் ஒன்றை இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் காரைக்குடியில் துவங்க உள்ளது.இது பற்றி கண்ணன் கூறுகையில், மலையாள படமான தி கிரேட் இந்திய கிட்சன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை நான் பெற்றுள்ளேன். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை டைரக்டர் செய்ய உள்ளேன். பலரின் பாராட்டை பெற்ற, மிகவும் வலுவான கதை. இதை தமிழ் ரசிகர்களின் ரசனை, சுவைக்கு ஏற்றது போல் அழகாக வழங்க உள்ளேன். ஒரு குடும்ப தலைவி, மனைவியின் நிலையை, அவர்களின் பங்கை சொல்லும் கதை.பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு, ராஜ்குமார் கலை, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத உள்ளார் என்றார்.