அரசு பள்ளிக்கு வாங்க அனிமேசன், ஸ்மார்ட் கிளாஸ் உண்டு : தனியார் பள்ளிகளுக்கு செக்

0
2344

தனியார் பள்ளிகளை விட ஒருபடி மேலே சென்று மாணவர்களை கவர பல்வேறு சிறப்பு திட்டங்களை விளக்கி அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று கேன்வாஸ் செய்து வருகின்றனர். காரைக்குடி அருகே அரியக்குடியில் கல்யாண கிருஷ்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். கடந்த 1946ல் துவங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 138க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்காக அரசு வழங்கும் சலுகைகளை தவிர, தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களை அனைத்தையும் ஆசிரியர்களின் முயற்சியில் காட்சி வடிவில் தயார் செய்துள்ளனர்.

பள்ளியில் உள்ள வசதிகளை கூறி தலைமை ஆசிரியர் சகாயராஜ் தலைமையில் ஆசிரியர்கள் டென்சிங்அருள்ராஜ், சாந்திசந்தனமேரி, பானுமதி, எஸ்எம்சி தலைவர் கவிதா, செல்வராணி, பூமணி ஆகியோர் ஒவ்வொரு வீடாகச் சென்று டோர் கேன்வாஸ் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   பொதுவாக தனியார் பள்ளிகள்தான் தங்கள் பள்ளியில் உள்ள வசதிகளை கூறி டோர் கேன்வாஸ் செல்வது வழக்கம். தற்போது அரசு பள்ளியும் இதுபோன்ற நடைமுறையை கடைபிடிப்பதால் தனியார் பள்ளிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் சகாயராஜ் கூறுகையில், ‘தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம். அட்மிஷனை உயர்த்த டோர் கேன்வாஸ் செய்து வருகிறோம்.

அன்பு, அறிவு, பணிவு என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். கடந்த ஆண்டு சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை நன்னெறி வகுப்பு, செவ்வாய் யோகா, புதன் ஆங்கில பேச்சு பயிற்சி, வியாழன் தமிழ் பாட்டு, கவிதை, பேச்சு போட்டி, வெள்ளி உடற்பயிற்சி என ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சி அளிக்கப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள 3 பருவங்களையும் சிடி வடிவில் தயார் செய்து காண்பிக்கிறோம். அனிமேசன் முறையில் பாடங்கள் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் புத்தகத்தில் படிக்கும் விசயம் நேரடியாக பார்க்கும்போது அவர்கள் மனதில் பதியும். இதில் தனியார் பள்ளிகளில் அட்மிஷன் போட்டர்வர்கள் கூட அதனை திரும்ப பெற்று எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். கூடுதல் உதவிதொடக்க கல்வி அலுவலர் பரிமளம் ஒத்துழைப்பாலேயே பல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.

சாந்தி: ஆங்கில பள்ளிகளை போல் சிறப்பாக கற்றுக்கொடுக்கின்றனர். வாசிப்பு திறன் மேம்பட்டுள்ளது. ரேங்க் கார்டு பெற்றோர்களை வரவழைத்துதான் தருகின்றனர். இதன்மூலம் மாணவரின் கல்வி நிலையை நேரடியாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். நான் இங்குதான் படித்தேன், எனது குழந்தைகள் இங்கு படித்துத்தான் நல்ல முறையில் கல்வி கற்றனர். தமிழ், ஆங்கில உச்சரிப்பு தெளிவாக கற்றுக்கொடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here