உங்கள் கணவர் இறந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன’ – மலேசியாவிலிருந்து மனைவிக்கு வந்த அதிர்ச்சி போன்கால்!

0
550

சிவகங்கை மாவட்டம், பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதியின் கணவர் மாரி. இவர் மலேசியாவுக்கு வேலைக்காகச் சென்று பத்து ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இறந்துபோனதாக இந்திய தூதரகத்திலிருந்து தகவல் சொல்லப்பட்டதோடு,ரூ.65,000 பணம் அனுப்பினால் உடலை அனுப்பிவைக்கப்படும் எனவும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் என் கணவரின் உடலை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார் மாரியின் மனைவி சுமதி.

இதுகுறித்து சுமதியிடம் பேசும்போது, ” எனக்கு இரண்டு குழந்தைகள். பெண் பிள்ளை பதினொன்றாம் வகுப்பும், மகன் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக என் கணவரிடம் இருந்து போன் தொடர்பு எதுவுமே இல்லை. அவர் மலேசியா போய் மூன்று வருடங்கள் எங்க குடும்பத்தோடு தொடர்பில் இருந்தார். ஒருமுறை ஊருக்கும் வந்து சென்றார். அதன் பிறகு மலேசியா சென்றவர் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தார். அங்கே அவருக்கு என்னாச்சு என்றே தெரியவில்லை. ஆகவே, நானும் மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை என் கணவர் குறித்து மனு கொடுத்தேன். கடைசி வரைக்கும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எனக்கு பதில் இல்லை.தற்போது 09.02.2018 அன்று மலேசிய இந்தியத் தூதரகத்தில் இருந்து போன் வந்தது. ‘உங்கள் கணவர் இறந்து போய் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவருடைய உடலைக் கொண்டுவர வேண்டுமானால் இந்திய ரூபாய்க்கு அறுபத்தைந்தாயிரம் கட்டுங்கள். அப்போது தான் உங்கள் கணவரின் உடலை அனுப்பி வைக்க முடியும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார்கள். தற்போது இருக்கும் என் குடும்பச் சூழ்நிலையில் 65,000 ரூபாய்கூட கட்ட முடியாது. இறந்துபோன என் கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து உதவ வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். மேலும், அமைச்சர் பாஸ்கரனையும், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதனையும் சந்தித்து மனுகொடுக்க இருக்கிறேன்” என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here